போலி ஆவணங்கள் மூலம் கார் லோன் வழங்கிய வங்கி மேலாளர் கைது

சென்னை: தேனாம்பேட்டை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளர் மெக்டலின், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், முகமது சாமில் (34) என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் தங்களது வங்கியில் ரூ.1,44,25,000 கார் லோன் பெற்று மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அப்போதைய வங்கி மேலாளர் வெங்கட்ராமன் விதிகளை பின்பற்றாமல், ஆவணங்களை சரிபார்க்காமல் பணத்திற்கு ஆசைப்பட்டு முகமது சாமிலுக்கு கோடிக்கணக்கில் லோன் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே முகமது முசாமில் மற்றும் அவரது கூட்டாளி அய்யாதுரை, ரவி மற்றும் சர்க்கரை, பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: