குடியரசு விழாவில் அயோத்தி ராம்லீலா

லக்னோ: வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு மாநிலங்களின் விழா பங்களிப்பு அட்டவணையை பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது. பாதுகாப்பு அமைச்சக வட்டார ஆதாரங்களின்படி, உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து புதியதாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோயில் மாதிரி வடிவம் மற்றும் அயோத்தியில் நடந்து வரும் ராம்லீலாவை அரங்கேற்றும் நிகழ்ச்சி குடியரசு தின விழா அட்டவணைக்கு முன்மொழியப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில கலாசார பாரம்பரியம் அமைச்சகம் இதற்கான பரிந்துரையை செய்துள்ளது.

இது தவிர, ரபேல் போர் விமானங்கள் அணிவகுப்பில் சேர்க்கப்படலாம். கடந்தாண்டு நடந்த குடியரசு தின விழாவில் சினூக் மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் முதல் முறையாக ஃப்ளை பாஸ்டில் பங்கேற்றன. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ‘சினூக்’ ஹெலிகாப்டர் கடந்தாண்டு மார்ச் 2019ல் விமானப்படையில் சேர்க்கப்பட்டது. இந்திய விமானப்படையில் தற்போது 4 ‘சினூக்’ ஹெலிகாப்டர்கள் உள்ளன.

Related Stories: