மூலதனம், வருவாய் ஈட்டும் திறன் இல்லாத கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து : ரிசர்வ் பேங்க் அதிரடி நடவடிக்கை

மும்பை, :மகாராஷ்டிராவைச் சேர்ந்த ‘தி கரத் ஜனதா சகாரி’ என்ற கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ‘தி கரத் ஜனதா சகாரி’ என்ற கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இந்த வங்கியில் போதுமான மூலதனம் இல்லை. வருவாய் ஈட்டுவதற்கான திறனும் இல்லை என்பதால், இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கியின் டெபாசிட்தாரர்களில் 99 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு, டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து அவர்களின் முழுத் தொகையையும் வழங்கப்படும்.

மேற்கண்ட வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் கிளைகளும் கலைக்கப்படும். வங்கியின் வைப்புதாரர்களின் டெபாசிட் பணத்தை திருப்பித் தரும் செயல்முறைகள் தொடங்கப்படும். ஒவ்வொரு வைப்புத்தொகை யாளருக்கும் பொது காப்பீட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி தலா ஐந்து லட்சம் ரூபாய் வரை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதம் கிடைக்கும். மேற்கண்ட வங்கியின் செயல்பாடுகள் டிச. 7ம் தேதி முதல் வங்கி நிர்வாகம் செயல்படாது. எனவே, வங்கி வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகையை செலுத்த வேண்டாம்’ என்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே, மகாராஷ்டிராவின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் கூட்டுறவு ஆணையர் தரப்பில், ‘தி கரத் ஜனதா சகாரி’ வங்கியை மூடுவதற்கு உத்தரவிட ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: