நடிகை சித்ராவின் தோழியும், அவருடன் இணைந்து டி.வி தொடர் மற்றும் விளம்பர படங்களில் நடித்தவருமான நடிகை ரேகா நாயர் நேற்று அளித்த வீடியோ பேட்டி: என் லவ்வர் பாய்பிரண்டா இருந்த ஹேம்நாத் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். வெளிப்படையாக சொன்னால், அவன் நல்ல பையனே கிடையாது. என்கேஜ்மென்ட் முடிந்தவுடன் எடுத்த போட்டோவை நான் பார்த்தவுடனே என் பிரெண்டுகளிடம் சொன்னது, சித்ரா நீ எவ்வளவோ கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறாய். சரி எது, தப்பு எது என்று எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டாய். ஆனால், இப்போது நீ தேர்வு செய்திருக்கும் நபர் சரியான ஆள் இல்லை என்று சொன்னேன். கிட்டத்தட்ட சென்னையில் இருக்கும் பாதி பெண்களுக்கு அவனை தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அவன் வராத கிளப்புகளே கிடையாது. கலந்துகொள்ளாத பார்ட்டிகளே கிடையாது. பப்புகளே கிடையாது. எல்லா இடத்துக்கும் வருவான். எல்லா பெண்களிடமும் பேசுவான். இந்த விஷயங்கள் எல்லாம் சித்ராவுக்கும் தெரியும், அவன் நல்ல பையன் இல்லை என்றும் தெரியும்.