ஆர்டிக் பிரதேசத்தில் 30 ஆண்டுகளில் பனிப்பாறைகள் கரைந்து விடும் அபாயம்

உலகின் மற்ற பகுதிகளை விட இரண்டு மடங்கு வேகமாக வடதுருவம் வெப்பமடைந்து வருகிறது. பனிப்பாறைகள் உருகுவதால் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கிறது.  பொதுவாக ஆர்டிக் பெருங்கடலில் கோடைக்காலத்தில் பனிப்பாறைகள் உருகுவதும், குளிர்காலத்தில் உறைவதும் வழக்கமானது. ஆனால் இந்த ஆண்டின் கோடைக் காலத்தில் பனிப்பாறைகள் அதிகளவில் உருகியுள்ளன. குளிர்காலத்தில் குறைந்த அளவே உறைந்துள்ளது.1982 முதல் 2010 ஆண்டு வரை நிலவிய சராசரி வெப்ப அளவை விட ஆர்டிக் பெருங்கடலின் வெப்ப அளவு தற்போது 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதே  நிலை நீடித்தால், அடுத்த 30 ஆண்டுகளில் பனிபாறைகள் வேகமாக உருகி 2050 ஆம் ஆண்டில் ஆர்டிக் பெருங்கடலில் பனிபாறைகளே இல்லாத நிலை ஏற்படும்

Related Stories: