சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணமாகி இரண்டே மாதத்தில் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஓய்வுப்பெற்ற காவலர் காமராஜ் உடைய மகள் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து படப்பிடிப்பில் பங்கேற்று வந்துள்ளார். நேற்று இரவு அனைவரையும் அதிர்ச்சியூட்டும் வகையில் இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக அவருடைய உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட சித்ரா 2 மாதங்களுக்கு முன் வீட்டிற்கு தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அக்டோபர் 19ம் தேதி சின்னத்திரை நடிகை சித்ராவின் பதிவுத் திருமணம் நடந்துள்ளது.
