பாஜவில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி

புதுடெல்லி: தெலங்கானாவில் காங்கிரஸின் முக்கியப் பிரமுகராக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. ஆனால், சமீப காலமாக காங்கிரஸ் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸில் இருந்து விலகினார். உடனடியாக டெல்லி சென்ற அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து நேற்று பாஜவில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். விஜயசாந்தி, கடந்த 1997ம் ஆண்டில் பாஜவில் சேர்ந்ததன் மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து டி.ஆர்.எஸ் கட்சி, காங்கிரஸ் என மாறி மீண்டும் 23 வருடங்களுக்குப் பிறகு பாஜவிலேயே சேர்ந்துள்ளார்.

Related Stories: