பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு; கச்சா எண்ணெய் விலையை உயர்த்த சவுதி அரேபியா திட்டம்: இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை உயர வாய்ப்பு..!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.51 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.21-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 86.25 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 78.97 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று, பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து 86.51 ரூபாய்க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து 79.21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயை உயர்த்த சவூதி அரேபியா முடிவு செய்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த மாதம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேரல் விகிதம் கச்சா எண்ணெய் உற்பத்தியை, ஒபிட நாடுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் தேவையும் அதிகரிப்பதால் விலையை உயர்த்தும் முடிவுக்கு சவூதி அரேபியா வந்துள்ளது. இதனால் இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: