அமெரிக்காவின் முதல் சீக்கிய போலீஸ் ஹூஸ்டன் தபால் நிலையத்துக்கு சந்தீப் சிங் தாலிவால் பெயர்: செனட்டில் தீர்மானம் நிறைவேறியது

வாஷிங்டன்: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சந்தீப் சிங் தாலிவால் சிறுவயதிலேயே பெற்றோருடன் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு இடம் பெயர்ந்தார். அங்கு வளர்ந்த அவர், 2015ல் அமெரிக்க போலீஸ் படையில் சேர்ந்தார். டெக்சாஸ் மாகாணத்தின் ஹாரிஸ் மாநில தலைமைக் காவலராக இவர் நியமிக்கப்பட்டார். இதன் மூலம், அமெரிக்காவின் முதல் சீக்கிய போலீஸ் என்ற பெருமையை இவர் பெற்றார். கடந்த 2019, செப்டம்பரில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த தாலிவாலை காரில் வந்த நபர் சுட்டுக்கொன்றார். இந்நிலையில், அவர் அமெரிக்காவில் ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில், ஹூஸ்டன் நகரின் ஹோவெல் சாலையில் உள்ள அடிக்ஸ் தபால் நிலையத்துக்கு அவருடைய பெயர் சூட்டப்படுகிறது. இதற்கான தீர்மானம், நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது இது, அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: