ஒரே மோதிரத்தில் 12,638 வைரக்கல்: குஜராத் வாலிபர் கின்னஸ் சாதனை

புதுடெல்லி: குஜராத் மாநிலம், மீரட்டை சேர்ந்தவர் ஹர்ஷித் பன்சால். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூரத்தில் நகை வடிவமைப்பு பிரிவில் படித்துள்ளார். இவர், ஏராளமான வைரங்களை கொண்ட நகையை உருவாக்க நினைத்தார்.

அதன்படி, 12,638 வைரங்கள் பதிக்கப்பட்ட மோதிரம் ஒன்றை உருவாக்கி உள்ளார். 8 அடுக்குகள் கொண்ட ‘சாமந்தி பூ’ போன்ற வடிவத்தில் மோதிரம் உள்ளது. இதனை அணிந்து கொள்வதும் மிகவும் எளிது. இதன் மொத்த எடை 165 கிராம் (5.8அவுன்ஸ்). ஹர்ஷித் உருவாக்கிய இந்த மோதிரம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன் 7,801 வைரக்கற்கள் பதித்த மோதிரம் தான் கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த வைர மோதிரத்தை விற்பனை செய்யும் எண்ணம் இதுவரை கிடையாது என ஹர்ஷித்தின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மோதிரத்தை செய்வதற்கு ஆன செலவை அது வெளியிடவில்லை.

Related Stories: