தமிழக பாஜ அறிவுசார் பிரிவு தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமனம்

சென்னை: தமிழக பாஜ அறிவு சார் பிரிவு தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். அவர் தொடங்கப் போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இவர் தமிழக பாஜ கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வந்தார். இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இந்நிலையில், பாஜ அறிவு சார் பிரிவு மாநில தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீயை கட்சி தலைமை நியமித்துள்ளது. இதற்காக அறிவிப்பை தமிழக பாஜ தலைமை வெளியிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் ஐஜியுமான அறிவுச் செல்வம் நேற்று தமிழக பாஜ தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார். அவர் தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் தலைமையில், தன்னை பாஜவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையை எல்.முருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் சாய் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>