மராட்டியத்தில் சட்ட மேலவைக்கு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் தோல்வி

மும்பை: மராட்டியத்தில் சட்ட மேலவைக்கு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. பட்டதாரி தொகுதியில் இருந்து மேலவைக்கு 6 பேரை தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் ஒன்றில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 6 எம்.எல்.சி இடங்களில் ஆளும் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியுள்ளது. மராட்டியத்தில் ஒரு மேலவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

நாக்பூர் எம்.எல்.சி பதவியை பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கைப்பற்றியது. முன்னாள் முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸின்தந்தை கங்காதர் ராவ் வென்ற நாக்பூர் தொகுதியில் பாஜக தோல்வியடைந்துள்ளது. நாக்பூர் பட்டதாரி தொகுதியில் பாஜக தோல்வி அடைந்து இருப்பது கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. நிதின் கட்கரி பாஜக சார்பில் நாக்பூர் எம்.எல்.சி.யாக பதவி வகித்தவர் ஆவார்.

Related Stories:

>