ஹாசன்-பேலூர் சாலை மேம்பாட்டு திட்டம் ரத்து பழிவாங்கும் அரசியல் செய்து வரும் பாஜ: மாஜி அமைச்சர் எச்.டி.ரேவண்ணா குற்றச்சாட்டு

ஹாசன்: ஹாசன்-பேலூரு சாலை மேம்பாட்டுக்காக 800 கோடி நிதி ஒதுக்கியது. ஆட்சி மாற்றத்துக்கு பின் அதிகாரத்துக்கு வந்த பா.ஜ. அரசு இந்த திட்டத்தை ரத்து செய்து பழிவாங்கும் அரசியல் செய்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான எச்.டி. ரேவண்ணா  செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஹாசன் மாவட்டத்தின் விமான நிலையத்தை ஷிவமொக்கா மாவட்டத்துக்கு எடுத்து சென்ற பா.ஜ. எந்த தகுதியை வைத்துக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. மாநிலத்தில் நடைபெறவுள்ள கிராம பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கிராம வளர்ச்சி அதிகாரிகள் பணம் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது சரியான முடிவு கிடையாது.  இதனால் மாநில தேர்தல் ஆணையம் கிராம பஞ்சாயத்து தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியிருந்த நேரத்தில் ஹாசன்-பேலூரு சாலை மேம்பாட்டுக்காக ₹800 கோடி நிதி ஒதுக்கியது. ஆட்சி மாற்றத்துக்கு பின் அதிகாரத்துக்கு வந்த பா.ஜ. அரசு இந்த திட்டத்தை ரத்து செய்து பழிவாங்கும் அரசியல் செய்து வருகிறது. அதே போல் பிலிகெரே-பேலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டத்தையும் ரத்து செய்துள்ளது. மாநிலத்தில் அரசியல் சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் காங்கிரஸ், பா.ஜ.வை சேர்ந்தவர்கள் அக்கட்சிகளை விட்டு விலகி வருகின்றனர். அதே போல் கிராம பஞ்சாயத்து தேர்தலை எதிர்கொள்ள மஜத தயார் நிலையில் உள்ளது. தீயசக்திகள், எதிரிகளை எதிர்கொள்ள எலுமிச்சை பழம் வைத்துக்கொண்டுள்ளேன். மத்திய அமைச்சர் கூட இந்த பழத்தை வைத்துக்கொண்டுள்ளார். நான் எலுமிச்சை பழம் வைத்துகொள்வது என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார்”.

Related Stories:

>