டெல்லியில் கொரோனா வேகம் குறைந்தது ஒரே நாளில் 75 ஆயிரம் பேருக்கு சோதனை

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா வேகம் தற்போது குறைந்துள்ளது. ஒரே நாளில் 75 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தியும் அதில் 3734 பேருக்கு மட்டுமே நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் கொரோனா 3ம் அலை மிகவும் உக்கிரமாக தாக்கியது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையால் தற்போது கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.

அதே சமயம் டெல்லியில் கொரோனா சோதனை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 75,230 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் 33,298 ஆர்டி-பிசிஆர் சோதனை ஆகும். இந்த சோதனை மூலம் 3,734 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா பரவல் விகிதம் 4.96 சதவீதமாக குறைந்தது. ஒட்டுமொத்தமாக 5,82,058 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 82 பேர் கொரோனாவால் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 9,424ஆக உயர்ந்தது.

Related Stories:

>