முதல்வரை சந்திக்க அனுமதிக்காததால் கண்ணீர் விட்டு அழுத மாற்றுத்திறனாளி பெண்

பெங்களூரு: முதல்வரை சந்திக்க வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் சாலையில் நின்று கண்ணீர் விட்டு அழுதார். மாநில முதல்வர் எடியூரப்பாவை சந்திக்க ரத்னம்மா என்ற மாற்றுத்திறனாளி பெண் முதல்வர் இல்லமான கிருஷ்ணாவுக்கு வந்தார். ஆனால் முதல்வருக்கு தொடர்ந்து கூட்டங்கள் இருந்த காரணத்தால் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் முதல்வரை சந்திக்க அந்த பெண்ணுக்கு அனுமதி வழங்கவில்லை. இதில் வருத்தமடைந்த பெண் கண்ணீர் விட்டு அழுதார். அதேபோல், பிச்சை எடுக்க போலீசார் விடுவதில்லை, எந்த வேலையும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இதனால் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பெண்ணை சாலையின் ஓரமாக அழைத்து சென்று சமாதானப்படுத்தினர். ஆனால் ரத்னம்மா முதல்வரை சந்திக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். இதனால் போலீசார் கிருஷ்ணா இல்லத்திற்குள் அழைத்து சென்று சமாதானம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

Related Stories: