கட்லெட்

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை  வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் சோயாவை 5 நிமிடங்கள் போட்டு எடுத்து வடிகட்டி, அதில் உள்ள நீரை பிழிந்து விட்டு மிக்சியில் அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி சோயா, அனைத்து மசாலாத்தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கி மசித்த உருளைக்கிழங்கு, மல்லித்தழை கலந்து இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட்டாக  தட்டி,  முட்டையில் தோய்த்து எடுத்து பிரெட் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.