கிருஷ்ணருக்காக 3000 மரம் வெட்டுவதா?

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் கோயிலுக்கு செல்லும் 25 கிமீ சாலையை விரிவாக்கம் செய்ய சுமார் 3000 மரங்களை வெட்ட அனுமதிக்குமாறு அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘100 ஆண்டு பழமையான மரங்களை வெட்டி விட்டு, 3000க்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டால் சரியாகி  விடுமா? ஆக்ஸிஜனை தரும் மரங்களுக்கு உபி அரசு தரும் ரூ.138 கோடி ஈடாகுமா? எனவே மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது. வேறு என்ன செய்யலாம் என யோசித்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துங்கள்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: