சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பதிவுத்துறை ஐஜி எச்சரிக்கை

சென்னை: பதிவுத்துறை தலைவர் சங்கர் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

* ஸ்கேன் செய்யப்பட்ட பக்கங்களை சரிபார்ப்பு செய்யும் பணி முற்றிலும் துறை அலுவலர்களை சார்ந்தது. ஸ்கேன் செய்யப்பட்ட பக்கங்களை நிறுவனத்தின் பணியாளர்களையோ அல்லது ஐபி கேமரா ஆபரேட்டர்களையோ பயன்படுத்தி சரிபார்க்க கூடாது எனவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களே சரிபார்ப்பு பணி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. சில அலுவலகங்களில் ஆவணத்தின் அடிப்படையான ஆவண எண்களை கூட சரிபார்க்காமல் சரிபார்ப்பு பணி செய்யப்பட்டுள்ளது.  இது போன்று தவறு செய்யும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

*  கடந்த 1865ம் ஆண்டு முதல் 2018 வரையிலான திருமண வி்ணணப்பம், பதிவுச் சான்று, பிறந்த மற்றும் இறந்த பதிவு, சர்வே நம்பர் அடிப்படையில் தொகுதி தகவல், பவர் பத்திரம் ஆவணம், நீதிமன்ற தீர்பபு, நிரந்தர கோப்பு, தற்காலிக கோப்பு, அலுவலக வரலாறு, சங்க, சீட்டு சங்க விண்ணப்ப பதி உள்ளிட்ட அனைத்தையும் தவறாமல் ஸ்கேன் செய்யப்பட வேண்டும். இதில், குறைபாடுகள் இருப்பின் கடுமையாக கருதப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: