அறுகம்புல் துவையல்

எப்படிச் செய்வது?

அறுகம்புல்லை கழுவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அறுகம்புல்லை வதக்கி எடுத்துக் கொள்ளவும். மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கறுப்பு உளுந்தை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் தக்காளி, பூண்டு, இஞ்சி, காய்ந்தமிளகாய், புளி அனைத்தையும் வதக்கவும். வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சி அல்லது அம்மியில் கரகரப்பாக அரைத்து எடுத்து சாதத்துடன் பரிமாறவும்.