“நடராஜனால்தான் இந்த ஊருக்கே பெருமை!”- சின்னப்பம்பட்டியில் வசிப்பவர்: ஆனந்தக் கண்ணீரில் தாய்

கான்பெர்ரா: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய நட்சத்திர ஆட்டக்காரராக மர்னஸ் விக்கெட்டை வீழ்த்தினார். தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இந்தியாவுக்காக தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வருகிறார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை எடுத்தது. தொடர்ந்து அந்த இலக்கை ஆஸ்திரேலியா விரட்டி வருகிறது.

வார்னர் காயம் காரணமாக விலக அவருக்கு மாற்றாக கேப்டன் ஆரோன் ஃபின்சும், லபுஷேனும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இந்தியாவுக்காக பும்ராவும், நடராஜனும் பந்து வீசினர். கடந்த இரண்டு ஆட்டங்களாக முதல் 25 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய ஓப்பனர்களின் விக்கெட்டை வீழ்த்தாமல் இருந்தனர் இந்திய பவுலர்கள். அதற்கு தீர்வு கொடுக்கும் விதமாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய நட்சத்திர ஆட்டக்காரராக மர்னஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் நடராஜன் வீழ்த்தும் முதல் விக்கெட் இது. தொடர்ந்தும் அபாரமாக பந்துவீசி வருகிறார் நடராஜன். இந்நிலையில் நடராஜனுக்கு பலரும் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜனை தொலைக்காட்சியில் பார்த்து குடும்பத்தினர் மகிழ்ந்தனர்.

ஊருக்கே பெருமை

இது குறித்து சின்னப்பம்பட்டியில் வசிப்பவர் கூறுகையில்; சேலம் மாவட்டம் சின்னப்பட்டி என்கிற சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நடராஜன் தற்போது வெளிநாட்டில் சென்று விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரால் தான் இந்த ஊருக்கே பெருமை; இன்னும் சில விக்கெட்டுகளை வீழ்த்தி, நடராஜனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி அடைந்தாள் மிகவும் மகிழ்ச்சி என சின்னப்பம்பட்டியில் வசிப்பவர் கூறினர்.

ஓபிஎஸ் வாழ்த்து

கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றிப்பயணத்தை துவங்கியிருக்கும் தமிழக வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தனது அபாரத் திறமையால் தாய்நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் நடராஜன் அவர்களின் சாதனைப்பயணம் தொடரட்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: