தண்டனை காலம் ஜனவரி 27ம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல்..!

பெங்களூரு: சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி உச்சநீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இதனையடுத்து, பெங்களூரு சிறையில் மூவரின் தண்டனை காலமும் நிறைவடைய உள்ள நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மூவரும் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது. இதையடுத்து சுதாகரன் தரப்பில் கடந்த மாதம் அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 ஆயிரத்தை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

இதனிடையே சசிகலாவின் தரப்பில் தனக்கு சிறைத்துறை விதிமுறைகளின்படி 126 நாட்கள் சலுகை வழங்க முடியும். எனவே முன்கூட்டியே தன்னை விடுதலை செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. தண்டனை காலம் ஜனவரி 27-ம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories: