சாமுண்டீஸ்வரி கோயிலில் பொய் கூறியதால் விஷ்வநாத்துக்கு தண்டனை: மாஜி அமைச்சர் சாரா மகேஷ் தகவல்

மைசூரு: தாய் சாமுண்டீஸ்வரி சக்தி வாய்ந்த அம்மன் அவரின் கோயிலில் பொய் பேசியதால், எச். விஷ்வநாத்துக்கு இது போன்ற தண்டனை  வழங்கியுள்ளார் என்று மாஜி அமைச்சர் சாரா மகேஷ் தெரிவித்தார்.மேலவை உறுப்பினர் எச்.விஷ்வநாத் பணத்தை வாங்கி கொண்டு பாஜவில் இணைந்தார் என்று மாஜி அமைச்சர் சாரா மகேஷ் குற்றம் சாட்டினார்.  இதற்கு விஷ்வநாத் மறுப்பு தெரிவித்தார். இதை தொடர்பாக சாமுண்டீஸ்வரி கோயிலில் சத்தியம் செய்ய தயாரா என மகேஷ் சவால் விடுத்தார். இதை விஷ்வநாத்தும் ஏற்று கொண்டார்.  இருவரும் கோயிலில் சத்தியம் செய்வதற்கு கோயில் வளாகத்திற்கு வந்தனர். ஆனால், சத்தியம் செய்யவில்லை. எதிரும் புதிருமாக இருவரும் நின்று  கொண்டிருந்தனர். அப்போது, சாரா மகேஷ் கண்ணீர்விட்டார். இதை தொடர்ந்து, இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

 இந்தநிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த விஷ்வநாத்துக்கு பாஜ சார்பில் மேலவை நியமன உறுப்பினர் பதவி  வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விஷ்வநாத்துக்கு அமைச்சராகும் தகுதியில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  இந்தநிலையில் சாமுண்டீஸ்வரி தாயின் கோயிலில் பொய் கூறியதால் விஷ்வநாத்துக்கு இதுபோன்ற நிலை வந்துள்ளது என்று முன்னாள்  அமைச்சரும், எம்.எல்.ஏவுமான சா.ரா.மகேஷ் தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது: மேலவை உறுப்பினர் எச். விஷ்வநாத் அமைச்சராகும் தகுதி இல்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு  வழங்கியுள்ளது. இதற்கு பின்னணியில் மும்பை டீம் உள்ளது. அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக வழக்கு பதிவு  செய்யவைத்துள்ளனர்.

அதேபோல், பா.ஜ.வினருக்கு எச்.விஷ்வநாதுக்கு அமைச்சர் பதவி வழங்க விருப்பம் கிடையாது. இந்த காரணத்தால் நியமன உறுப்பினர் பதவி  வழங்கப்பட்டது. தற்போது அவரது அரசியல் வாழ்க்கை மூழ்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் சாமுண்டீஸ்வரி கோயிலில் சத்தியம் செய்யும் விஷயத்தில் கோயில் வளாகத்தில் அமர்ந்து நான் கண்ணீர் விட்டேன்.  தாய் சாமுண்டீஸ்வரி சக்தி வாய்ந்த தெய்வம். இதனால் எச். விஷ்வநாத்துக்கு இது போன்ற தண்டனை வழங்கியுள்ளார். சாமுண்டீஸ்வரி தேவியின்  கோயிலை சாட்சியாக வைத்த காரணத்தால் என்னை மன்னிக்க வேண்டும் என்று கோயிலுக்கு சென்று ரூ.1001 காணிக்கை செலுத்தி மன்னிப்பு  கேட்டேன் என்றார்.பா.ஜ.வினருக்கு எச்.விஷ்வநாதுக்கு அமைச்சர் பதவி வழங்க விருப்பம் கிடையாது. இந்த காரணத்தால் நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

Related Stories: