திருப்பதியில் வைகுண்ட வாயில் தரிசனம்: ரூ.300 ஆன்லைன் டிக்கெட் விற்பனை திடீர் நிறுத்தம்

திருமலை: திருப்பதியில் வைகுண்ட வாயில் தரிசனத்துக்கான ரூ.300 ஆன்லைன் டிக்கெட் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட வாயில் வழியாக 2 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு முதல்முறையாக 10 நாட்கள் வைகுண்ட வாயில் வழியாக பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வருகிற 25ம் தேதி முதல் அடுத்த மாதம் ஜனவரி 3ம் தேதி வரை வைகுண்ட வாசல் திறக்கப்படும். அதற்குண்டான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை 11 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‘தேவஸ்தான சர்வரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போது சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிட முடியவில்லை. எப்போது, ஆன்லைனில் வெளியிடப்படும் என்பது குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும்’ என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>