டிச. 31ம் தேதிக்குள் நெல் ெகாள்முதல் மையங்களில் பெயரை பதிவு செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவிப்பு

சாம்ராஜ்நகர்: அரசே நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்த நிலையில், விவசாயிகள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட வேளாண்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகாவில் சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். நெல்லுக்கு உரிய விலையில்லாததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை இருந்தது. எனவே விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்து உரிய விலை வழங்கவேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையேற்ற அரசு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய முடிவு செய்தது. இதன்படி முதல் ரக நெல்லுக்கு 1880ம், மற்ற ரக நெல்லுக்கு 1868 எனவும் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இதில் பயன்பெறும் விவசாயிகள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்தவதால் எலந்தூர் தாலுகாவில் உள்ள எஸ்தூரு, பசவபுரா, கே.ஓசூர், மல்லிகேனள்ளி, ஜினதனள்ளி, துக்கட்டி, உன்னூரு, கவுடள்ளி, மாம்பள்ளி, அம்பலே மற்றும் சைக்கமுலே ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலனடைவார்கள்.

Related Stories: