கொள்ளிடம் பகுதியில் 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமைவாய்ந்த சுமைதாங்கி கற்கள்: 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமைவாய்ந்த சுமைதாங்கி கற்கள்

கொள்ளிடம்: கொள்ளிடம் சோதனைச் சாவடியில் இருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் முதலைமேடு என்ற இடத்தில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுமைதாங்கி கல் சாலையோரம் உள்ளது. எந்தவித பாதிப்பும் இன்றி அப்படியே இன்றளவும் அமைந்துள்ளது. போக்குவரத்துக்கு உரிய வாகன வசதிகள் இல்லாதபோது மக்கள் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமங்களுக்கு செல்லும்பொழுது பொருட்களை தங்கள் தோள்களிலும், தலைகளிலும் சுமந்து சென்றபோது சற்று இளைப்பாறுவதற்காக இந்த சுமைதாங்கி கல்லை பயன்படுத்தி அதன் மேல் சுமையை வைத்து பின்னர் தூக்கி சென்றதாக கூறப்படுகிறது. கிராம மக்கள் சுமந்து சென்ற பாரத்தை இந்த கற்கள் தாங்கி நின்றதால் சுமைதாங்கி என்றழைக்கப்படுகிறது. 200 ஆண்டுகளைக் கடந்தும் இந்த சுமைதாங்கி எந்த சேதமுமின்றி அப்படியே உள்ளது. இதேபோல் கொள்ளிடத்தில் இருந்து ஆச்சாள்புரம் செல்லும் வழியில் சாலையோரத்தில் அனுமந்தபுரம் என்ற இடத்தில் ஒரு சுமைதாங்கி உள்ளது. இதுவும் எந்தவித பாதிப்பும் இன்றி அன்று வைத்தது போல் இன்றும் உள்ளது. கொள்ளிடம் பகுதியில் இது போன்று வைக்கப்பட்டுள்ள மிகவும் பழமையான சுமைதாங்கி கல்லை ஒரு நினைவுச் சின்னமாக வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: