மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, பாஜ நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், விழுப்புரம் மத்திய மாவட்டம், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம், அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் வி.பழநி தலைமையில், தேமுதிக ஒன்றிய பொருளாளர் பால்சிங், ஒன்றிய அதிமுக தகவல்தொழில் நுட்ப அணி துணைச் செயலாளர் யோகேஸ்வரன்-பாஜ கிளை தலைவர் ராஜ்கிரன், துணைத் தலைவர் நவீன்-தேமுதிக கிளை துணைச் செயலாளர் ஜெய்தீப்சிங் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மணி, முனுசாமி, கிருபாகரன், அய்யனார் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>