ரொம்ப பெரிய சாதனை லஞ்சம் வாங்குவதில் நம் நாடுதான் நம்பர் 1

புதுடெல்லி: சினிமாவில் ஒரு டயலாக் வரும், ‘எல்லா நாட்லேயும் லஞ்சம் இருக்கு. அங்கல்லாம் சட்டத்தை மீறத்தான் லஞ்சம். ஆனா நம்ம நாட்டில வேலைய செய்றதுக்கே லஞ்சம் தரணும்’ என ஹீரோ கூறுவார். அதை உண்மை என நிரூபித்துள்ளது ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற ஆய்வு நிறுவனம். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அந்த அமைப்பு கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில், அரசு சேவைகளை பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பதில் ஆசியாவிலேயே இந்தியா 39 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. 50 சதவீதம் பேர் அதிகாரிகளின் வற்புறுத்தலால் லஞ்சம் தருகிறார்கள். 32 சதவீதம் பேர் அதிகாரிகளுடன் கொண்டு தொடர்பை பயன்படுத்தி லஞ்சம் தந்து காரியம் சாதிக்கின்றனர். இதற்கு காரணம், அரசின் சேவைகைளை பெறுவதற்கு சிக்கலான வழிமுறைகள் காணப்படுவது, தாமதம், பல்வேறு கட்டுப்பாடுகள், போதிய கண்காணிப்பு இன்மை போன்றவையே என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: