கர்ப்பம், குழந்தை என்னை சிறந்த நபராக ஆக்கியது :சானியா மிர்சா உருக்கம்

மும்பை: அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆவண படத்தை பார்த்து  இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா டுவிட்டரில் கூறி உள்ளதாவது: செரீனா படத்தை பார்த்த பிறகு எல்லா தாய்மார்களுக்கும் ஒரு நம்பிக்கை அளித்தது. கர்ப்பம் என்பது என் வாழ்க்கையில் முதல்முறையாக நான் அனுபவித்த ஒன்று. நீங்கள் அதை அனுபவித்தவுடன், அதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

இது உங்களை முற்றிலும் மாற்றுகிறது. கர்ப்பத்திற்குப் பிறகு மீண்டும் விளையாட வருவது ஒரு சவாலாக இருக்கும். நான் செரீனாவுடனும் மற்ற ஒவ்வொரு பெண்ணுடனும் என்னை தொடர்புபடுத்த முடியும். கர்ப்பம் மற்றும் ஒரு குழந்தையைப் பெற்றிருப்பது என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது. கர்ப்ப காலத்தில் நான் 23 கிலோ எடை கூடிய பிறகு மீண்டும் கடுமையான பயிற்சியால் சுமார் 26 கிலோவை குறைத்து விளையாட வந்தேன். நான் டென்னிசை நேசிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>