வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் டிச.,1ல் முதல் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் முதல் கட்ட போராட்டம் டிசம்பர் 1ம்தேதி முதல் தொடங்குகிறது என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.   இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  பாமகவும், வன்னியர் சங்கமும் இணைந்து கடந்த 22ம் தேதி கூட்டுப் பொதுக்குழு கூட்டம் நடத்தியது. அதன்படி முதற்கட்டமாக டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன் பெருந்திரள் போராட்டம் நடைபெறவுள்ளது.   பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும்.

 வன்னியர்களுக்கான 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விளக்கும் துண்டறிக்கைகளை வீடுவீடாக சென்று வழங்க வேண்டும். நமது கோரிக்கையின் நியாயத்தையும், போராட்டத்தின் வலிமையையும் ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும். 2021ம் ஆண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கிடைக்கும் சமூகநீதி ஆண்டாக மலர்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: