'கடந்த 10 ஆண்டின் சிறந்த வீரர்'விருது..!! இந்திய வீரர்கள் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர்கள் பரிந்துரை

டெல்லி: ஐசிசியின்  கடந்த 10 ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய வீரர்கள் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் சிறந்த வீரர், சிறந்த ஒரு நாள் வீரர், டெஸ்ட் வீரர், டி20 வீரர் ஆகிய 5 பிரிவுகளில் விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்க முடிவெடுத்துள்ளது.

அதன்படி கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீரர், கடந்த பத்தாண்டுகளில் சிறந்த டெஸ்ட் போட்டி வீரர், கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள் போட்டி  வீரர், கடந்த பத்தாண்டுகளில் அறத்துடன் விளையாடிய வீரர் எனப் பல விருதுகளை வழங்குகிறது ஐசிசி. ஆண்கள் பெண்கள்  என இரு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள்  பிரிவில் : விராட் கோலி, ரோஹித் சர்மா, டோனி, ஆர். அஸ்வின் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்: விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஏபி டி வில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஆர். அஸ்வின், குமார் சங்கக்காரா.

சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்: விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், ஜேம்ஸ் ஆண்டர்சன், கேன் வில்லியம்சன், ரங்கனா ஹெராத், யாஷிர் ஷா

ஒருநாள் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்: விராட் கோலி,லசித் மலிங்கா,மிட்செல் ஸ்டார்க்,ஏபி டி வில்லியர்ஸ்,ரோஹித் சர்மா, எம்.எஸ். டோனி, குமார் சங்கக்காரா

20 ஓவர் போட்டி  சிறந்த  வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்: விராட் கோலி, ரஷித் கான்,,ரோஹித் சர்மா,இம்ரான் தாஹிர்,ஆரோன் ஃபிஞ்ச்,லசித் மலிங்கா, கிறிஸ் கெயில்

அறத்துடன் விளையாடிய வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்: விராட் கோலி, கேன் வில்லியம்சன், அன்யா ஸ்ருப்சோல், மிஸ்பா உல் ஹக், மெக்குல்லம், கேதரின் பிரண்ட், ஜெயவர்தனே, டேனியல் வெட்டோரி, எம்.எஸ். டோனி

Related Stories:

>