போராட்டங்களுக்கு அனுமதி தமிழக அரசு பாரபட்சம்: தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு

கோவை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று காலை கோவை மருதமலை முருகன் கோயிலுக்கு ெசன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசியல் கட்சியினர் நிகழ்ச்சி மற்றும் ஜனநாயக ரீதியான போராட்டம் நடக்கும்போது அதுதொடர்பான விதிமுறைகளை பின்பற்றுவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது. அனைவருக்கும் பொதுவாக இல்லாமல், எதிர்கட்சிகள் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

தமிழகத்தில் விரைவில் நடைெபற உள்ள சட்டமன்ற தேர்தல், தொகுதி உடன்பாடு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. கட்சி கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்கவேண்டும். மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி, கருத்து தெரிவிப்பது சரியான நடைமுறை அல்ல. இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Related Stories: