கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது?: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் 25-ம் தேதி முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு.!!!

சென்னை: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் 25-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

இதுவரை கிட்டத்தட்ட 17 மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில், வரும் 25-ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெறும் நிகழ்ச்சியில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். தொடர்ந்து, முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், பல்வேறு மாவட்ட வளர்ச்சி பணி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Related Stories: