சிவகங்கை மாவட்டத்தில் போலி விவசாயிகள் பெற்ற ரூ84 லட்சம் மீட்பு

சிவகங்கை: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 1.12.2018 முதல் 31.3.2020 வரை ஒரு லட்சத்து 4ஆயிரத்து 125 விவசாயிகள் பயனாளிகளாக உள்ளனர். 1.4.2020 முதல் செப்டம்பர் வரை 5,600 விவசாயிகள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன் மோசடி புகார் எழுந்ததையடுத்து இந்த 5,600 விவசாயிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

போலி விவசாயிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் 2,600 கணக்குகள் மோசடியானவை என தெரியவந்தது. இதையடுத்து கடந்த 20ம் தேதி வரை ரூ.84 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

Related Stories: