மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவருக்கு இடஒதுக்கீடு 7.5%ஆக குறைத்தற்கான காரணம் என்ன? - தங்கம் தென்னரசு

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவருக்கு இடஒதுக்கீடு 7.5%ஆக குறைத்தற்கான காரணம் என்ன? என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 10% உள்ஒதுக்கீடு தர ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் பரிந்துரைக்கும் அதனை 7.5%ஆக குறைத்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். பதவி சுகத்துக்காக தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை முதல்வர் பழனிச்சாமி காவு கொடுத்துவிட்டார். தமிழகத்திற்குள் நீட்டை அனுமதித்துவிட்டு இனி செட் தேர்வு பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மவுனம் காக்கிறார் முதல்வர் என குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: