மாஸ்க் போடலையா? 2 ஆயிரம் அபராதம்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

புதுடெல்லி: மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதத்தை ரூ.500ல் இருந்து ரூ.2 ஆயிரமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக உயர்த்தியுள்ளார். டெல்லியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி கேட்டுள்ளார். டெல்லியில் கொரோனா பரவல் அதிகமாகி இருப்பதற்கு, மக்கள் மாஸ்க் அணியாததும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது. இதனால், மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு தற்போது விதிக்கப்படும் ரூ.500 அபராதத்தை ரூ.2 ஆயிரமாக கெஜ்ரிவால் நேற்று அதிரடியாக உயர்த்தினார். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியார் மருத்துவமனைகளில் 80 சதவிகித அவசர சிகிச்சை படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதிகள் 50 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: