மே.வங்கத்தை கைப்பற்ற அமித்ஷா அதிரடி மாதந்தோறும் இனி ஸ்பெஷல் விசிட்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல்  வரை மாதம்தோறும் அமித்ஷாவும், ஜே.பி.நட்டாவும் பயணம் செய்ய உள்ளனர்.மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் பெற்ற வெற்றியால் உற்சாகமாகி உள்ள பாஜ., அடுத்த இலக்கை மேற்கு வங்கத்துக்கு வைத்துள்ளது. சமீபத்தில் இம்மாநிலத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும், அமித்ஷாவின் வருகையால் இம்மாநில தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

இந்நிலையில், மேற்கு வங்கத்துக்கு மாதந்தோறும் அமித் ஷாவும், பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவும் செல்ல முடிவு செய்துள்ளனர். இது குறித்து இம்மாநில பாஜ தலைவர் திலீப் கோஷ் நேற்று கூறுகையில், ‘‘தேர்தல் பணிகளுக்காக அமித்ஷாவும், நட்டாவும் இனி மாதம்தோறும் மேற்கு வங்கத்துக்கு தனித்தனியாக வர உள்ளனர். அமித்ஷா மாதத்தில் 2 நாட்களும், ஜேபி நட்டா 3 நாட்களும் இங்கு தங்குவார்கள். இத, பாஜ தொண்டர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும்,’’ என்றார்.

5 ஆக பிரிப்பு

தேர்தல் பணிகளுக்காக மேற்கு வங்கத்தை 5 மண்டலங்களாக பாஜ பிரித்துள்ளது. பிரிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள தலைவர்கள் கட்சி கூட்டங்களையும், பொதுமக்களுக்கான போராட்டங்களையும் இனி அதிகமாக முன்னெடுப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: