திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டம்: மாவட்டப் பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் அறிவிப்பு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டம்  கீழ்க்கண்ட அட்டவணையின்படி நடைபெற உள்ளது.இன்று 16ம் தேதி திருவள்ளூர் வடக்கு ஒன்றியம், காக்களூர், ஆர்.எம்.கெஸ்ட் ஹவுஸில் காலை 9 மணி அளவிலும், பூந்தமல்லி மேற்கு ஒன்றியம், கொத்தியம்பாக்கத்தில் காலை 11 மணி அளவிலும், திருவேற்காடு நகரம், இராஜங்குப்பத்தில் மாலை 4 மணி அளவிலும், நாளை 17ம் தேதி திருமழிசை பேரூர், அண்ணா சமுதாய கூடத்தில் காலை 9 மணி அளவிலும், புழல் ஒன்றியம், கிராண்ட்லைன், சமுதாய கூடத்தில் காலை 9 மணி அளவிலும், பூந்தமல்லி கிழக்கு ஒன்றியம்.

மோட்டல் ஹைவேயில் நாளை  காலை 10 மணி அளவிலும், செங்குன்றம் பேரூர்கன்னி செட்டியார் திருமண மண்டபத்தில், காலை 11 மணி அளவிலும், பூந்தமல்லி மேற்கு ஒன்றியம் மற்றும் திருநின்றவூர் பேரூர் நடுகுத்தகை, டிஎஸ்எம் திருமண மண்டபத்தில் மாலை 4 மணி அளவிலும், 18 ம் தேதி ஆவடி மாநகரம், தண்டுரை,  ஜெய்கிறிஸ் மஹாலில்,காலை 9 மணி அளவிலும், சோழவரம் தெற்கு ஒன்றியம், பாடியநல்லூர், வி.எம்.ஜெ.பேலஸில் காலை 9 மணி அளவிலும்,  வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம், என்.என்.ஜெ. மஹாலில்காலை 11 மணி அளவிலும், பூந்தமல்லி நகரம் யாதவா திருமண மண்டபத்தில், மாலை 4 மணி அளவிலும் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் தெற்கு ஒன்றியம்  பின்னர் தெரிவிக்கப்படும்.இவ்வாறு ஆவடி சா.மு.நாசர் கூறியுள்ளார்.

Related Stories: