மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்கள் பார்வையிட தடையால் பொதுமக்கள் வெளியில் நின்று ரசித்தனர்

மாமல்லபுரம்:  தீபாவளிக்கு அடுத்தநாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாமல்லபுரத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அங்கு புராதன  சின்னங்கள் செல்லும் வழி கேட்டுகள் மூடியிருந்ததால் அனைவரும் வெளியில் நின்று ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றனர்.மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலத்தில் சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாகவும் உறவினர்கள், நண்பர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் காதல் ஜோடிகள் என நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் குவிந்தனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை சுற்றுலா தலத்திலே மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர். வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

 மேலும், புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோயில் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் புராதன சின்னங்களை வெளியில் நின்று கண்டு ரசித்தும், அவற்றின் முன் நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Related Stories: