மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

குமரி: குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. சென்னையிலும் லேசான முதல் மிதான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நவம்பர் 15ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 16ம் தேதி கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: