முஷாரப்புக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்த நீதிபதி கொரோனாவுக்கு பலி

பெசாவர்: கடந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் வரை பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷாரப் இருந்தார். 2007ம் ஆண்டு நவம்பரில் அவர் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேசதுரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு முதல் துபாயில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கி இருக்கிறார். தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக முஷாரப் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்த நிலையில்,கடந்த டிசம்பரில் சிறப்பு நீதிமன்ற தலைமை நீதிபதி வாகர் செத்(59), முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்தார். பின்னர், பெஷாவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வாகர் செத் பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி வாகருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானது. அவர் பெஷாவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச குல்சாம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

Related Stories: