உத்தமபாளையம் அருகே கண்மாயில் தவித்த வெளிநாட்டு பறவை

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே, ராமசாமிநாயக்கன்பட்டி-கோகிலாபுரம் ரோட்டில் உள்ள  தாமரைக்குளம் கண்மாயில், ஆண்டுதோறும் வலசை போதல் நடக்கும். இந்த சமயங்களில் ஆஸ்திரேலியாவின் கூளைக்கிடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அரியவகை பறவைகள்  வருகை தரும்.

கண்மாயில் 4 மாதம் தண்ணீ தேங்குவதால், பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து இரை தேடும். இந்நிலையில்,  கண்மாயில் நேற்று வெளிநாட்டு பறவை ஒன்று, நடக்க முடியாமலும், பறக்க முடியாமலும் தவித்தது. இதையறிந்தராமசாமிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பவுன்ராஜ் பறவையை மீட்டு, உத்தமபாளையம் வனத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைத்தார்.

Related Stories: