பள்ளிகள் திறக்கப்படுமா?: பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்..!!

சென்னை: 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கும் எனவும், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரின் கருத்துக்கள் அரசிடம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை கூறியிருக்கிறது. பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கடந்த 9ம் தேதி தமிழகம் முழுவதும் கருத்துக்கள் கேட்கப்பட்ட நிலையில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக தனியார் பள்ளியை சேர்ந்த பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் எனவும், அரசு பள்ளியை சேர்ந்த பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, அரசின் ஒட்டுமொத்த அறிக்கையை நேற்றிரவு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையை ஆராய்ந்து இன்று இறுதி முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் குடும்பங்கள் பள்ளிகள் திறப்பு குறித்தான முடிவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என குறிப்பிட்டிருக்கிறார். ஆதலால் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

Related Stories: