பள்ளி முதல்வர் பையில் குண்டு பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் இன்று காலை டெல்லி புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி முதல்வர் செல்வராஜ் என்பவரது கைப்பையை ஸ்கேன் செய்தனர். சத்தம் வந்தது. உஷாரான பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பையை தனியாக எடுத்து வைத்து விசாரணை நடத்தினர். ‘குண்டு எதுவும் இல்லை’ என்று செல்வராஜ் கூறினார். சந்தேகம் தீராத அதிகாரிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு பையை திறந்து சோதனையிட்டனர். அதற்குள் 9 எம்எம் ரக துப்பாக்கி குண்டு ஒன்று இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் பயணியையும், பறிமுதல் செய்த துப்பாக்கி குண்டையும் விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, எங்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களை நாங்கள் சோதனை நடத்துவோம். அதில், ஒரு மாணவனின் பையில் இருந்து இந்த குண்டு கண்டெடுக்கப்பட்டது. அதை எனது பையில் போட்டு வைத்திருந்தேன். அந்த பையை தவறுதலாக எடுத்து வந்து விட்டேன்’ என்றார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சாப் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவனுக்கு துப்பாக்கி குண்டு எப்படி கிடைத்தது? பறிமுதல் செய்யப்பட்ட குண்டை அப்போதே போலீசில் ஒப்படைக்காமல் 8 மாதங்களாக பையில் போட்டு வைத்திருந்தது ஏன் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

Related Stories: