மினி கடலைப்பொடி ஊத்தப்பம்

எப்படிச் செய்வது?

தோசை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லியை சேர்த்து கலந்து கொள்ளவும். தோசைக் கல்லை காயவைத்து மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் மீது தேவையான அளவு வேர்க்கடலைப் பொடியை தூவவும். பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.