அமெரிக்கா தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை வெற்றி; செனட் சபை உறுப்பினராக சாரா மெக் பிரைட் தேர்வு.!!!

வாஷிங்டன்: வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்காவில் தேர்தலில் வெற்றிபெற்று செனட் சபை உறுப்பினராக சாரா மெக் பிரைட் என்ற திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகின் சக்திவாய்ந்த பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்பதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. அமெரிக்காவின் 46வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த மாகாணங்களில் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதனால், அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்பா, பிடெனா என்பது பற்றி எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, டெல் அவேர் பகுதியில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட்ட திருநங்கை ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக செனட் சபை உறுப்பினராகியுள்ளார். வழக்கறிஞரான 31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட் ஒரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாக செயலாற்றியுள்ளார்.

இந்த தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்துள்ள சாரா மெக் பிரைட், நாம் செய்து முடித்து விட்டோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி என தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்கா தேர்தலில் திருநங்கை வெற்றி பெற்றுள்ளது உலகளவில் பெரிதும் பேசும் பொருளாக அமைந்துள்ளது.

Related Stories: