திருப்பதி கோயிலில் 6 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்

திருமலை: கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. தொற்று  குறைய தொடங்கியதால் கடந்த வாரம் முதல் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்களை பெற  பக்தர்கள் ஒருநாள் முன்னதாகவே சமூக இடைவெளியின்றி  நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து, இலவச தரிசன டிக்கெட்டை  ஆன்லைனில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  

இந்நிலையில், இலவச தரிசன டிக்கெட் நிறுத்தப்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கிடையே, நேற்று முதல் திருப்பதி  பூதேவி காம்ப்ளக்ஸில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: