ஏ.டி.சி.,யில் உள்ள பார்க்கிங் தளத்தில் இன்டர்லாக் கற்கள் அமைக்க கோரிக்கை

ஊட்டி: ஊட்டி நகரின் முக்கிய பிரச்னையாக பார்க்கிங் பிரச்னை விளங்கி வருகிறது. குறிப்பாக சீசன் சமயங்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகருக்குள் வரும் போது, அவற்றை நிறுத்த போதிய இட வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி அருஏடிசி., பகுதியில் ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் ஒருபகுதியில் சுமார் 1.50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த இடம் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் தற்போது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கட்டணமின்றி தங்களது வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். மண் தளமாக உள்ள நிலையில் மழை காலங்களில் வாகனங்கள் சென்று வந்ததில் சேரும் சகதியுமாக மாறி விடுகின்றன. இதனால் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பார்க்கிங் தளத்தில் இன்டர்லாக் அமைத்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: