சேதமடைந்த அருப்புக்கோட்டை ரோடு

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியின் பின்பகுதி வழியாக மேம்பாலம் வரையிலான பழைய அருப்புக்கோட்டை ரோடு உள்ளது. 150மீ நீளமுள்ள சாலை வழியாக செந்திவிநாயகபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேம்பாலத்தில் இருந்து நகருக்குள் வருவதற்கான பாதையாக உள்ள பழைய அருப்புக்கோட்டை ரோடு வழியாக தினசரி நகருக்குள் உள்ள பருப்பு, எண்ணை மில்கள், கடைகள், குடோன்களுக்கு நூற்றுக்காணக்கான சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. போக்குவரத்து நிறைந்த பழைய அருப்புக்கோட்டை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது.

ரோட்டில் உள்ள குழிகளை 6 மாதங்களுக்கு முன் ரோட்டரி சங்கத்தினர் கான்கிரீட் கலவையால் சரி செய்தனர். ஆனால், கான்கிரீட் போடப்பட்ட இடங்களை சுற்றிய பகுதி பள்ளமாகி வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்ற வகையில் உள்ளது. நகராட்சி நிர்வாகம் நகராட்சி பின்பகுதி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தரமான சாலை அமைக்க வேண்டுமென நகர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: