பெரியகுளத்தில் குளத்து நீரை பயன்படுத்தி முதல் போக சாகுபடி துவக்கம்

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் கடந்த மாதம் முதல் பரவலாக பெய்த மழையால் வடகரை பகுதியில் உள்ள குளங்களில் நீர் நிரம்பியது. இதனால்  இந்த பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலங்களில் முதல் போக சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பெரியகுளம் அருகே உள்ள நடுபுரவு ஆண்டிகுளம், வேளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர்.  இப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் என்எல்ஆர் ரக நெல் நடவு செய்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை  பெய்ய உள்ளதால், இவ்வாண்டு முதல் போக சாகுபடியால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  

மேலும் இப்பகுதியில் உள்ள குளங்களை முறையாக தூர் வாரினால் கோடையில் குளத்து நீரை பயன்படுத்தி இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய  வாய்ப்பு இருந்தும், அவை தூர்வாரப்படாமல் இருப்பதால் விவசாயிகள் ேவதனையடைந்துள்ளனர்ன. எனவே, இந்த குளங்களை தூர்வார தமிழக அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: