தொழில்நுட்ப கோளாறு காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலைய 2வது அணு உலை நிறுத்தம்: மின்தட்டுப்பாடு ஏற்படும் நிலை

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில், சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல பிரிவுகள் இயங்குகிறது.சென்னை அணுமின் நிலையத்தில் 220 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் உள்ளன. மொத்தம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மத்திய தொகுப்புக்கு அனுப்பப்படுகிறது. பின்னர், மாநில வாரியாக அந்தந்த தேவைக்கு ஏற்ப மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. கடந்தாண்டு முதலாவது அணு உலை தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்டது. 2வது அணு உலை மட்டும் இயங்கியது. அதில், 2வது அணு உலையும் நேற்று காலை தொழில்நுட்ப கோளாறால் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் மின்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் 2வது அணு உலை இயங்கும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: